Rasipuram History in Tamil


வணக்கம் நண்பர்களே இன்று நாம் நமது ராசிபுரம் பற்றிய வரலாற்றை தமிழில் தெளிவாக பார்க்க போகிறோம்.




History of Rasipuram

தமிழ் நாட்டில் உள்ள பண்டைய கால நகராட்சிகளில் ராசிபுரம் நகராட்சியும் மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஏனென்றால் இதன் நகராட்சி அந்தஸ்து கிடைத்து வருடமானது 1.10.1948 ஆம் வருடம் கொடுக்கப்பட்டது சுதந்திரம் அடைந்த அதே வருடத்தில் ராசிபுரம் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது, 22.5.1998 ஆம் வருடம் ராசிபுரம் நகராட்சி முதல் நிலை(first grade) நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகராட்சிகளில் ராசிபுரம் நகராட்சியும் ஒன்றாகும் ராசிபுரத்தில் மொத்த பரப்பளவு 8.158 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.
ராசிபுரம் நகராட்சி அமைந்துள்ள இடமானது நாமக்கல் மற்றும் சேலம் இடையில் அமைந்துள்ளதுராசிபுரம் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 121182 ஆகும் இதில் மொத்தம் 27 வார்டுகளை உள்ளடக்கிய மிகப்பெரும் நகராட்சி ஆகும்.

ராசிபுரம் நகராட்சி Education City எனவும் அழைக்கப்படுகிறது ஏனென்றால் ராசிபுரம் நகராட்சியில் கல்லூரிகளும் பள்ளிகளும் அளவுக்கு அதிகமாகவே உள்ளனதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ராசிபுரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிப்பதற்காக அதிகபட்ச மாணவர்கள் வந்தமையும் உள்ளனர்.

ராசிபுரத்தில் மிக அருகாமையில் அமைந்துள்ள ஊர்களில் நாமகிரிப்பேட்டை, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம்ஆண்டகளூர் கேட், பட்டணம், புதுப்பட்டி, புதுப்பாளையம் போன்றவைகள் மிக முக்கியமான ஊராட்சிகளாக கருதப்படுகிறதுஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை செல்ல வேண்டுமென்றால் ராசிபுரம் வழியாக செல்வதால் அவர்களுக்கு இரண்டு மணி நேரம் முன்கூட்டியே செல்ல முடியும்.

Occupation in Rasipuram

ராசிபுரத்தில் எண்ணற்ற தொழில்கள் நடைபெற்று வருகின்றன அதில் மிகவும் முக்கியமாக நெய் தயாரித்தல்நூற்பாலைகள்கைத்தறிவாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரித்தல்விவசாயம் போன்ற அனைத்து விதமான தொழில்களும் வளர்ந்து கொண்டே வருகின்றனராசிபுரத்தில் இருக்கும் தொழில்களில் நெய் தயாரிக்கும் தொழிலும் கைத்தறி தொழிலும் மிக முக்கியமானதாகும், ராசிபுரம் நெய்யானது தமிழ்நாடு மற்றும் அண்டைய மாநிலங்களுக்கும் Export செய்யப்படுகிறது.

Transport Service

1995ம் வருடம் சேலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ராசிபுரம் வழியாக ரயில் சேவையை தொடங்கப் போவதாக அறிவித்ததுஅடுத்த வருடம் 1996 இல் அதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியது மத்திய அரசு நடைபெற்ற இந்த பணியானது கடந்த 2005ஆம் வருடம் 90% பணிகளை முடித்த பின்னர் முதல் சோதனை ஓட்டமாக சேலத்தில் இருந்து கரூர் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வழியாக செய்யப்பட்டது, 2010ஆம் வருடம் முழு பணியும் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக சோதனை ஓட்டத்தை செய்து முடித்தனர், 2012ம் வருடத்தில் இருந்து சேலத்தில் இருந்து கரூருக்கு நாமக்கல் மற்றும் ராசிபுரம் வழியாக தினசரி ரயில்கள் இயக்கப்பட்டன தற்சமயம் ஒரு நாளில் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறதுஇந்த ரயில் சேவையானது ராசிபுரம் மற்றும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்த மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேற்கு மாவட்டங்களான ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் சென்னை செல்ல வேண்டுமென்றால் முக்கிய வழித்தடமாக ராசிபுரம் உள்ளது.

Main Villages

ராசிபுரத்தில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,

ஆண்டகளூர் கேட்
நாமகிரிப்பேட்டை
குருசாமிபாளையம்(பில்லா நல்லூர்)
பட்டணம்
புதுப்பாளையம்
சீராப்பள்ளி

Bus Stands

ராசிபுரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன ஒன்று காவல் நிலையம் அருகில் பழைய பேருந்து நிலையமும் மற்றொன்று ஆத்தூர் செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையமும் அமைந்துள்ளனகடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களாகவே ராசிபுரத்தில் நெருக்கடிகள் காரணமாக புதிய நிலையம் ஆனது ஆண்டுகள் ஒரு கேட்டுக்கு அருகில் அமைக்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.

Entertaining Places

ராசிபுரத்தில் 5 திரையரங்குகளும் மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலா தளமாக பரவச உலகம் அமைந்துள்ளது

1) Sri Devi Theatre
2) Samundi Theatre
3) Vijayalakshmi Theatre
4) Bharathi Theatre (Not Running)
5) Kirshna Theatre (Not Running)

More Details Visit Our Full Website : Click here For Rasipuram News
Rasipuram History in Tamil Rasipuram History in Tamil Reviewed by Suresh Kumar on February 03, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.